கிராமியம் எனும் இந்த வலைப்பதிவிற்க்கு வருகை தந்தமைக்கு அனைவருக்கும் என் முதல் வணக்கங்கள்!
எனது பெயர் ராஜு - நான் சென்னையில் வசிக்கிறேன். எனது
சொந்த கிராமம் "மன்னாற்கோட்டை" விருதுநகர் மாவட்டம். எனது தாயும் (பாண்டியம்மாள்) தந்தையும் (பாக்கியநாதன்) 1985- இல் சொந்த ஊரை விட்டு பிழைக்க சென்னையில்
குடியேறிவிட்டனர். எனது தந்தை சென்னையில் காலடி வைக்கும் போதே மத்திய
அரசாங்க உத்தியோகத்துடன் (சென்னை துறைமுகம் - உதவியாளர்) வந்து இறங்கினார்.
என்னதான்
கிராமத்தில் இருந்து வந்திரிந்தாலும் பல வருடம் சுமார் இங்கே குடியேறிய
நாளில் இருந்தே சொந்த ஊருக்கு போனதும் இல்லை பல கிராமங்களை பார்த்ததும்
இல்லை. எனக்கு வயது 27-இல் 2013-இல் (தமிழ் மாதம் ஐப்பசி) ஆங்கில
மாதம் நவம்பர் - 06-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை எனக்கு இருந்த பல வருட
கிராம சுற்றுலா எண்ணமும் எனது மகளால் நிறைவேறியது.
அன்றுதான்
என் மகளுக்கும் என் தாய் மற்றும் மனைவிக்கும் தலை முடி தானம், பண்டி முனீஸ்வரர் கோவிலில் கடா வெட்டி
பொங்கலும் வைத்தனர் பலவருடம் கழித்து சொந்த ஊருக்கு வந்து குல
தெய்வத்தையும் வழிபாட்டு குடும்பத்தினரும், உறவினரோடும் ஒன்று சேர்ந்து
மனம் மகிழ்ந்தோம்.
நான்
இந்த கிராமியம் எனும் வலைப்பதிவை ஊருவாக்க காரணம் இயற்கை மற்றும்
பாரம்பரிய வாழ்வியல் முறையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது ஆனால் அவற்றை
அறிந்துகொள்ள மிகவும் ஆசை. குறிப்பாக நம் தமிழ் முன்னோர்கள் வாழ்வியல்
இன்றும் உலகமே வியந்து பார்க்கும் அளவிற்க்கு எட்டா கனீயாக உள்ளது அப்படி
பட்ட பாராட்டுக்கு உரிய நம் தமிழர் வாழ்வியலை முழுமையாக அறியவும், ஆய்வுகள்
செய்யவும், அவற்றை பதிவு செய்து உலக மக்களுக்கும் தமிழ் ஆர்வம்
உள்ளவருக்கும் பரப்புவதே இந்த வலைப்பதிவின் நோக்கமாகும்.