"உழவர் உரிமை" என்னும் கோப்பில் இருந்து இந்த பாடல் ஒரு சில வரிகள்...
காலாற மடை திறந்து கழனி எல்லாம் விதை விதைச்சு,
கை சிவக்க கதிர் அறுத்து மலை போல போர் குவிச்சு,
மாடு கட்டி போர் அடிச்சா மாலாது சென்னல் நெல்லு, யானை கட்டி போர் அடிச்ச
சோழ நாட்டுல இன்று சோற்றுக்கு வழி இல்லைனு சொல்லு பாட்டுல! (2)
ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு ஆள கடிச்சது போல,
ஊர கடிச்சு நாட்டை கடிச்சு உசுர கடிச்சது போல,
இல்லாம போனததையா விவசாயம், இனி எப்படிதான் வாழும் இந்த சமுதாயம்? (2)
நெல்லு விதைச்சவன் சோளம் விதைச்சவன் சோகம் விதைச்சது போல,
வாய்க்கால் விதைசசவன் தினம் வயிறு வாடுவது போல,
பொய்யாகி போனததையா விவசாயம், இனி போராட வேண்டாமா சமுதாயம்? (2)